ஈரானின் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துடன் தொடர்புபட்டு இரண்டாவது நபர் ஒருவர் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாடு குறிப்பிட்டுள்ளது.
மாஜித்ரேசா ரெஹ்னவர்த் என்பவர் நேற்று (12) காலை பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டார் என்று நீதித்துறை அறிவித்துள்ளது.
ஈரானிய துணைப்படை உறுப்பினர்கள் இருவரை கத்தியால் குத்தி கொலை செய்ததுடன் தொடர்புபட்டு அவர் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளார்.
எனினும் முறையான நடைமுறை இல்லாத வழக்கு விசாரணை மூலம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மரண தண்டனை விதிக்கப்படுவதாக மனித உரிமைக் குழுக்கள் எச்சரித்துள்ளன.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை 23 வயதான மாஹசன் ஷெகாரி தூக்கிலிடப்பட்டார். துணைப்படை வீரர்கள் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியதாக அவர் குற்றங்காணப்பட்டார்.
முறையற்ற வகையில் ஹிஜாப் அணிந்த குற்றச்சாட்டில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட 22 வயது மஹசா அமினி என்ற பெண் மரணித்த சம்பவத்தைத் தொடர்ந்தே ஈரானில் ஆர்ப்பாட்டம் வெடித்தது.






Discussion about this post