- நாளை முதல் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு
இன்றையதினம் (16) நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை நாளையதினம் (17) முதல் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் சில இடங்களில் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்பு காணப்படுவதோடு, பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.






Discussion about this post