பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பேராசிரியர்கள் மேற்கொண்டுவந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் நேற்றுடன் (19) நிறைவடைந்துள்ளது.
அதன்படி இன்று முதல் கலைப் பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட பேராசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் அதுல சேனாரத்னவும் அவரது மகனும் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேராதனை பல்கலைக்கழக கலைப்பீட விரிவுரையாளர்கள் கடமையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்படி கடந்த 13ஆம் திகதி முதல் நேற்று வரை கலைப்பீட பேராசிரியர்கள் பரீட்சை கடமைகள் உட்பட சகல கடமைகளில் இருந்தும் விலக நடவடிக்கை எடுத்திருந்தனர். எவ்வாறாயினும், இன்று காலை முதல் மீண்டும் வழமைபோல் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக கலைப் பீட பேராசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேராசிரியர் அதுல சேனாரத்ன மீதான தாக்குதல் தொடர்பில் இதுவரையில் சுமார் 12 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Discussion about this post