மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சேலைத்தலைப்பு சிக்குண்டதில் வீதியில் தவறி வீழ்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். கோப்பாய் மத்தியைச் சேர்ந்த நாகேஸ்வரி சோதிலிங்கம்(வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தாய், மகள், பேரப்பிள்ளை என மூவர் மோட்டார் சைக்கிளில் இருபாலையிலுள்ள தேவாலயத்துக்கு சென்று வீடு திரும்பும் போது தாயின் சேலை மோட்டார் சைக்கிளின் பின் சில்லினுள் சிக்கியுள்ளது. இதனால் அவர் வீதியில் விழுந்துள்ளார்.
உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.






Discussion about this post