சிம்பாப்வேக்கான புதிய தூதுவராக இலங்கையில் பிறந்த மினோலி பெரேரா அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மினோலி பெரேரா கொங்கோ ஜனநாயகக் குடியரசு, கொங்கோ குடியரசு, மலாவி மற்றும் சாம்பியா ஆகியவற்றுக்கும் அங்கீகாரம் பெறுவார்.
வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் சிரேஷ்ட தொழில் அதிகாரியான மினோலி பெரேரா, மிக அண்மையில் நிறைவேற்றுப் பிரிவின் முதலாவது உதவிச் செயலாளராகப் பணியாற்றினார்.
அவர் முன்னதாக பெய்ஜிங், போர்ட் மோர்ஸ்பி, நியூயோர்க், பியூனஸ் அயர்ஸ் மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களில் பணியாற்றியுள்ளார்.




Discussion about this post