Sunday, March 22, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home சினிமா

திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாகிட்டேனு பெற்றோரிடம் கூறினேன், 72 மணிநேரம் டைம் கொடுத்தார்கள்: நடிகை நேஹா

by editor
May 19, 2023
in சினிமா
0 0
A A
0
திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாகிட்டேனு பெற்றோரிடம் கூறினேன், 72 மணிநேரம் டைம் கொடுத்தார்கள்: நடிகை நேஹா
Share on FacebookShare on Twitter

நடிகர் அங்கத் பேடியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே கர்ப்பமானது குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார் பிரபல நடிகையான நேஹா தூபியா.

பாலிவுட் நடிகையும், மாடலுான நேஹா தூபியாவும், நடிகர் அங்கத் பேடியும் காதலித்து கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். அதே ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்தார் நேஹா. அந்த குழந்தைக்கு மெஹர் தூபியா பேடி என பெயர் வைத்தார்கள்.

மனோபாலா மறைவு : சத்யராஜ் இரங்கல்திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதால் தான் அவசர, அவசரமாக நேஹாவுக்கும், அங்கத் பேடிக்கும் திருமணம் நடந்தது என அப்பொழுது பேச்சு கிளம்பியது. இதையடுத்து திருமணத்திற்கு முன்பு நேஹா கர்ப்பமானதை அங்கத் பேடி பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

2021ம் ஆண்டு இரண்டாவது முறையாக கர்ப்பமான நேஹா தூபியா ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அவர்கள் தங்கள் மகனுக்கு குரிக் சிங் தூபியா பேடி என பெயர் வைத்தனர்.

Angad Bedi

கணவர், குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் நேஹா. இந்நிலையில் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமானது குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அந்த பேட்டியில் நேஹா தூபியா கூறியதாவது,

என் முடிவுகள் யாரையும் காயப்படுத்தவலில்லை. அப்படி இருக்கும்போது நமக்கு பிடித்ததை செய்வதில் என்ன தவறு இருக்கிறது.

எங்களின் திருமணம் திடீரென்று முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்கு முன்பே நான் கர்ப்பமாகிவிட்டேன். இதையடுத்து என் பெற்றோரிடம் விஷயத்தை சொன்னபோது ஓகே, ஆனால் 72 மணிநேரத்திற்குள் இதை சரி செய்ய வேண்டும் என்றார்கள். இதையடுத்து நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம்.

மீண்டும் மும்பைக்கு சென்று திருமணம் செய்து கொள்ள எனக்கு இரண்டரை நாள் அவகாசம் அளிக்கப்பட்டது என்றார்.

மனதில் பட்டதை செய்பவர், பேசுபவர் நேஹா தூபியா. அவர் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமானது குறித்து அறிந்தவர்கள் சமூக வலைதளங்களில் நேஹாவை கிண்டல் செய்தார்கள். மேலும் குழந்தை பிறந்த பிறகு நேஹாவின் எடை கூடிவிட்டது.

அதற்காகவும் நேஹாவை சமூக வலைதளங்களில் கலாய்த்தார்கள். பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு எடை அதிகரிப்பது வழக்கம் ஆகும். அப்படி இருக்கும்போது நேஹா தூபியாவை எடைக்காக கிண்டல் செய்வது நியாயம் இல்லை என்று திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தெரிவித்தார்கள்.

திருமணத்திற்கு முன்பு கர்ப்பமானது நேஹாவின் தனிப்பட்ட விஷயம். அது குறித்து அவர் யாருக்கும் விளக்கம் அளிக்கத் தேவையில்லை. இருப்பினும் பேட்டியில் அவர் கர்ப்பம் பற்றி வெளிப்படையாக பேசியிருப்பது பாராட்டுக்குரியது என்கிறார்கள் ரசிகர்கள்.

நேஹா படங்கள் தவிர்த்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

நேஹா நடிப்பில் கடைசியாக வெளியான பாலிவுட் படம் A Thursday. அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதற்கு முன்பு ரிலீஸான வித்யுத் ஜாம்வாலின் சனக் படத்திலும் துணிச்சலான போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேஹாவின் கணவர் அங்கத் பேடி பாலிவுட் படங்கள் தவிர்த்து வெப்தொடர்களிலும் நடித்து வருகிறார். சல்மான் கானின் டைகர் 3 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் பிஷன் சிங் பேடியின் மகன் தான் அங்கத் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?
இந்தியா

விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?

February 28, 2026
இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!
உலகம்

இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!

January 4, 2026
தமிழ் சீரியல் நடிகை உயிர்மாய்ப்பு!
உலகம்

தமிழ் சீரியல் நடிகை உயிர்மாய்ப்பு!

December 30, 2025
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

March 21, 2026
”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

March 21, 2026
இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

March 21, 2026
நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

March 21, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version