லண்டனில் இருந்து விக்னேஷ் சிவன் போன் செய்ததை அடுத்து அஜித்தை தொடர்பு கொண்டு பேசினார் நயன்தாரா என தகவல்
அஜித்துக்கு நயன்தாரா போன் செய்து பேசியதாகவும், ஆனால் அவர் முடியாதுனா முடியாது என்று சொன்னதாகவும் கூறப்படுகிறது.
துணிவு படத்தை அடுத்து அஜித் குமார் நடிக்கும் ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில் இருந்து தற்போது விக்னேஷ் சிவனை நீக்கிவிட்டார்களாம். விக்னேஷ் சிவன் லண்டன் சென்றதை பார்த்த ரசிகர்கள் குட் நியூஸுக்காக காத்திருக்க இப்படி ஒரு கெட்ட செய்தி வந்துவிட்டது.
ஏ.கே. 62 படத்தில் நீங்கள் இல்லை என விக்னேஷ் சிவனிடம் கூறினார்களாம். இதையடுத்து லண்டனில் இருந்து தன் மனைவி நயன்தாராவுக்கு போன் செய்து நடந்ததை கூறி வருத்தப்பட்டாராம் விக்னேஷ் சிவன். சரி கவலைப்படாத, நான் பேசுறேன் என்று கூறி லைகா நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினாராம் நயன்தாரா. ஆனால் அவர்கள் நயன்தாரா கூறியதை கேட்க தயாராக இல்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
லைகா கேட்காவிட்டால் என்னவென்று அஜித்துக்கு போன் செய்தாராம் நயன்தாரா. சார், தயவு செய்து கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இது விக்னேஷ் சிவனின் கனவுப் படம் என்று அஜித்திடம் கூறினாராம் நயன்தாரா. சாரிமா, கதை சரியில்லை. என்னால் அவர் படத்தில் நடிக்க முடியாது, புரிந்து கொள்ளுங்கள் என்று கூறி நயன்தாராவை அதிர வைத்துவிட்டாராம் அஜித்.லைகா நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவிருந்தார் விக்னேஷ் சிவன்.
அப்பொழுதும் அந்த படத்தில் விக்னேஷ் சிவனை வேலை செய்யவிடாமல் செய்துவிட்டது. விக்னேஷ் சிவனுக்கு நியாயம் வேண்டும் என அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகிறார்கள்.






Discussion about this post