ஜப்பானின் இசு தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பானின் இசு தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.
இன்று ஜப்பானின் இசு தீவுகளில் 00:06:45 (UTC 05:30) மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் இசு தீவுகளில் 28.2 கிமீ ஆழத்தில் நிலைகொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) தகவல் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். ஆனால், இதுவரை இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்று அந்நாடு தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று தஜிகிஸ்தான், துஷான்பேவில் இன்று அதிகாலை 01:37 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ரிக்டராக பதிவானது.
இதற்கு முன்பு, இதற்கு முன்பு, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் நிலநடுக்கத்தில் 9 பேரும், ஆப்கானிஸ்தானில் 4 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.





Discussion about this post