Thursday, May 7, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home அறிவியல்

5 புதிய Update களை வழங்கியது (WhatsApp) வாட்சப்…

by editor
April 3, 2023
in அறிவியல், உலகம்
0 0
A A
0
வாட்ஸ்அப் குரூப் அம்சத்தில் அடுத்த அப்டேட்.
Share on FacebookShare on Twitter

👉சமூக வலைத்தள பாவனையில் அதிகளவான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வட்ஸ்அப் செயலியானது, தொடர்ந்து பல மேம்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது. மேலும் அந்த நிறுவனம் எதிர்வரும் மாதங்களில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

👉செய்திகளை அனுப்புவதை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், அம்சம் நிறைந்ததாகவும் மாற்றும் முயற்சியில், விரைவில் செய்திகளைத் திருத்தல், அரட்டையில் குறிப்பிட்ட செய்தியைப் Pin செய்தல் உள்ளிட்ட பல வசதிகளை வழங்கவுள்ளது.

👉இந்த அம்சங்கள் டெலிகிராம் போன்ற சில செயலிகளில் ஏற்கனவே கிடைத்தாலும், அவை வட்ஸ்அப் பயனர்களுக்கு வரவேற்கத் தக்க மேலதிக அம்சமாகவுள்ளது.

🔴செய்திகளைத் திருத்துதல்

👉இந்த அம்சம் ஊடாக அனுப்பிய செய்தியில், விரைவில் தவறுகளை எளிதாக திருத்தலாம் அல்லது குறிப்பிட்ட செய்திகளை நீக்காமல் கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். அனுப்பிய செய்திகளைத் இதற்காக 15 செக்கன் கால அவகாசம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

👉ஒரு செய்தியைத் திருத்தினால், அது அதன் குமிழிக்குள் “திருத்தப்பட்டது” என்ற அடையாளத்துடன் குறிக்கப்படும்.

🔴செய்திகளைப் Pin செய்தல்

👉இது டெலிகிராம் போன்ற பிற செய்தியிடல் செயலிகளில் பல ஆண்டுகளாகக் கொண்டிருக்கும் மற்றொரு அம்சமாகும். அரட்டை சாளரத்தில் செய்திகளை பின் செய்ய வட்ஸ்அப் விரைவில் அனுமதிக்கும். இதனை குழு மற்றும் தனிப்பட்ட அரட்டைகளில் பயன்படுத்த முடியும்.

👉ஒரு செய்தியை PIN செய்வதன் மூலம் அந்த குறிப்பிட்ட செய்தியை வேகமாக அணுகலாம். அரட்டை குமிழியில் செய்தி பின் செய்யப்பட்டுள்ளதைக் குறிக்கும் சிறிய குறியீடு காண்பிக்கும்.

🔴மறைந்து போகும் செய்திகளுக்கான 15 கால விருப்பங்கள்

👉மறைந்து போகும் செய்திகளுக்காக ஏற்கனவே உள்ள கால அவகாசத்துக்கு மேலதிகமாக மேலும் பல புதிய கால அளவு தெரிவுகளை வட்ஸ்அப் விரைவில் வெளியிடவுள்ளது.

👉அதன்படி, 1 மணிநேரம், 3 மணிநேரம், 6 மணிநேரம், 12 மணிநேரம், 2 நாட்கள், 3 நாட்கள், 4 நாட்கள், 5 நாட்கள், 6 நாட்கள், 14 நாட்கள், 21 நாட்கள், 30 நாட்கள், 60 நாட்கள், 180 நாட்கள் மற்றும் 1 ஆண்டுகள் என்றவாறு கால அவகாசத்தை தெரிவுசெய்யலாம்.

👉இது முக்கியமான மற்றும் ரகசியமான செய்திகளுக்கு குறுகிய, கால அளவு பயனுள்ளதாக இருக்கும். அதே சமயம் நீளமானவை, நீண்ட காலத்திற்கு சேமிப்பிற்கு இடையூறு ஏற்படாத வகையில் செய்திகளை அழிக்க அனுமதிக்கும்.

🔴குரல் வடிவ செய்தியை ஒருமுறை மட்டும் கேட்டல்

👉ஒருமுறை படங்களைப் பார்ப்பது போல, விரைவில் குரல் வடிவ செய்தியை ஒருமுறை மாத்திரம் கேட்பதற்கு அனுப்ப முடியும். இந்த செய்திகளை ஒருமுறை மட்டுமே இயக்க முடியும்.

👉மிக முக்கியமான குரல் பதிவை அனுப்பினால் அல்லது பெறுநரை நம்பவில்லை என்றால், இது பயனுள்ள அம்சமாக இருக்கலாம்.

🔴வேகமான WhatsApp Windows பயன்பாடு

👉இது கடந்த வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. விண்டோஸ் செயற்பாட்டு தளத்தில் வட்ஸ்அப்பிற்கான புதிய செயலியை வெளியிட்டுள்ளது. இதனூடாக தற்போது காணொளி அழைப்புகளில் 32 பேர் வரை சேர்க்கலாம்.

👉பெரிய மடிக்கணினி திரைகளைப் பயன்படுத்தவும் அனுமதிக்கிறது. இதன் பயன்பாடு தற்போது வேகமாகவும் உள்ளது.

👉நிலையான பயன்பாட்டிற்கான இந்த மேம்படுத்தல்களை வட்ஸ்அப் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே நேரத்தில் மேலும் பல அம்சங்களையும் மெட்டா அறிமுகப்படுத்தவுள்ளது.

Related Posts

மீண்டும் யுத்தம்?
உலகம்

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
எண்ணெய் சுத்திகரிப்பு தடை – சீனா எதிர்ப்பு!
உலகம்

எண்ணெய் சுத்திகரிப்பு தடை – சீனா எதிர்ப்பு!

April 27, 2026
இன்று உலக மலேரியா தினம்
உலகம்

இன்று உலக மலேரியா தினம்

April 25, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Recent News

மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version