அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து, இங்கிலாந்து அரசாங்க காரியாலய கைத்தொலைபேசிகளில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதித்தது. பாதுகாப்பு கருதி அந்நாட்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை செயற்படுத்தியது.
அரசாங்கத்தின் முக்கிய அலுவலகங்களின் பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அரசாங்க அலுவலகங்களில் அரசாங்கத்திற்கு சொந்தமான மின்னணு சாதனங்களில் சீனா வீடியோவான டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிப்பதாக இங்கிலாந்து பாராளுமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், அவுஸ்திரேலியா அரசாங்கமும் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது.
இது குறித்து பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் தெரிவிக்கையில் ,
டிக் டாக் செயலியால் ஏற்படும் சாதக, பாதங்கள் குறித்து உள்துறை அமைச்சு அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.





Discussion about this post