ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆர்மேனியாவை சேர்ந்த குடி மக்கள் விசா இல்லாமல் பயணிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகம் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் விசா நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கோல்டன் விசா முறையில் சில மாற்றங்களை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம் ஏராளமான சலுகைகளையும் அளித்தது.
ஆர்மேனியா
இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆர்மேனியா ஆகிய இரு நாடுகளும் இணைந்து அவர்களின் குடிமக்களுக்கு விசா இல்லாத பயண முறை ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனை ஆர்மேனியாவின் துணை வெளியுறவு அமைச்சர் வாகன் கோஸ்டன்யன் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அதில் ஆர்மேனியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான அரரத் மிர்சோயன் (Ararat Mirzoyan) அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றபோது ஆர்மீனியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கான விசா முறையை நீக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாக கோஸ்டன்யன் தெரிவித்துள்ளார்.





Discussion about this post