Thursday, May 7, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home சினிமா

வசூலில் பட்டையை கிளப்பும் ‘சந்திரமுகி 2’: இரண்டே நாளில் இத்தனை கோடி வசூலா.!

by editor
October 1, 2023
in சினிமா
0 0
A A
0
வசூலில் பட்டையை கிளப்பும் ‘சந்திரமுகி 2’: இரண்டே நாளில் இத்தனை கோடி வசூலா.!
Share on FacebookShare on Twitter

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சந்திரமுகி 2’ படம் வசூலில் தொடர்ச்சியாக மாஸ் காட்டி வருகிறது.

தமிழ் சினிமாவில் பேய் பட சீசன்களையே துவக்கி வைத்த படம் என சந்திரமுகியை சொல்லலாம். பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியாகி இமாலய வெற்றியை பெற்றது ‘சந்திரமுகி’ படம். முதல் பாகத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து, தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சந்திரமுகி’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு நடிப்பில் வெளியாகி சுமார் 300 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பட்டையை கிளப்பியது இப்படம். இதன் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை பல ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

‘சந்திரமுகி 2’ படத்தில் ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன், மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். நேற்று முன்தினம் வெளியாகியுள்ள இப்படம் தொடர்ச்சியாக பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ‘சந்திரமுகி’ படம் ரிலீஸ் ஆகி உள்ளது. எல்லா மொழிகளிலும் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளிலே இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. அந்த வகையில் முதல் நாளில் ‘சந்திரமுகி 2 படம் ரூ. 7.50 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதனையடுத்து நேற்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் படத்தின் வசூல் அதிகரித்துள்ளது. அதன்படி இரண்டாவது நாளில் இந்திய அளவில் இப்படம் ரூ. 12.75 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் இரண்டே நாளில் ரூ. 20 கோடி வரை கலெக்ஷனை அள்ளியுள்ளது ‘சந்திரமுகி 2’. இப்படத்துடன் போட்டியாக வெளியான சித்தா, இறைவன் படங்களை தாண்டி ‘சந்திரமுகி 2’ படத்திற்கு பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

முதல் பாகத்தை போன்றே ‘சந்திரமுகி 2’ படத்திலும் ராதிகாவின் குடும்பத்தினர் வேட்டையபுரம் அரண்மனைக்கு வருகின்றனர். குலதெய்வ வழிபாட்டிற்காக அவர்கள் வரும் போது, சந்திரமுகி வருகிறாள். அதன் பின்னர் என்ன நடக்கிறது? சந்திரமுகி யாரை பழி வாங்குகிறாள்? என்பதை முதல் பாகத்தை போல் கலர்புல்லாக இயக்கியுள்ளார் பி. வாசு. இதனால் ‘சந்திரமுகி 2’ படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ச்சியாக வசூல் வேட்டை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts

குடும்பத்துக்கு விஜய் கடன்
இந்தியா

குடும்பத்துக்கு விஜய் கடன்

March 31, 2026
விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?
இந்தியா

விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?

February 28, 2026
இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!
உலகம்

இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!

January 4, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Recent News

மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version