ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் இராணுவத்திற்கும் இடையேயான போர் 23-வது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இதனால் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகின்றது. போரில் இருதரப்பிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
போரில் பொதுமக்கள், குறிப்பாக பெண்களும், சிறுவர்களும் அதிகளவில் பாதிக்கப்படுவதினால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா. மற்றும் உலக நாடுகள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் போர் நிறுத்தத்திற்கான அழைப்பை இஸ்ரேல் தொடர்ந்து நிராகரித்து வருகின்றது.
இந்நிலையில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான இரண்டாம் கட்ட போர் ஆரம்பமாகியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.





Discussion about this post