பங்களாதேஷில் இன்று காலை 09.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 55 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
இதனால் பங்களாதேஷின் பல்வேறு பகுதிகளில் உணரப்படிருப்பினும், இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இதற்கு முன்பு ஒக்டோபர் 2ஆம் திகதி 5.4 ரிக்டர் அளவில் வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் அதே போன்ற மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது





Discussion about this post