ஆப்கானிஸ்தானில் இன்று காலை 9.08 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 90 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது.
கடந்த ஒக்டோபா் 7ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4,000க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். அதனையடுத்து ஒக்டோபர் 13, 15 மற்றும் நவம்பர் 21ஆம் திகதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Discussion about this post