Wednesday, May 6, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home சினிமா

சூர்யா முதல் அசோக் செல்வன் வரை; இந்தாண்டு அமேசான் பிரைமில் வெளியாகும் வெப்சீரிஸ், படங்களின் லிஸ்ட்!

by Editor
March 22, 2024
in சினிமா
0 0
A A
0
Share on FacebookShare on Twitter

சூர்யாவின் ‘ கங்குவா’, ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’, ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா -2’, இயக்குநர் நலன் குமாரசாமி – கார்த்தி திரைப்படம் உள்ளிட்ட பல படங்கள் திரையரங்குகளில் வெளியான பிறகு அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவிருக்கின்றன.

அமேசான் பிரைம் நிறுவனம் ஒரு பிரமாண்ட நிகழ்வைச் சமீபத்தில் நடத்தியிருக்கிறது.

மும்பையில் நடந்த நிகழ்வில் அடுத்த ஒரு ஆண்டுக்கு அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ள திரைப்படங்களையும் சீரிஸ்களையும் குறித்து அறிவித்திருக்கிறது. பிரபல நடிகர்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர். இந்தாண்டு மட்டும் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் படங்கள், சீரிஸ் என மொத்தமாக 69 வெளியீடுகளைப் பார்வையாளர்களுக்கு எடுத்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் படங்களும் வெப் சீரிஸும் வெளியாகின்றன. அந்த லிஸ்டைப் பார்க்கலாம்.

தமிழ்:
இந்த வருடம் பல தமிழ் வெப்சீரிஸ்கள் வெளியாகவுள்ளது. அதில் தற்போது ரிலீஸூக்குத் தயாராகி இருப்பது, ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’. தெலுங்கு நடிகராகப் பெரிதும் பரிச்சயமான நடிகர் நவீன் சந்திரா, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டிலும் பெரிதாகப் பேசப்பட்டார். அவர் நடிப்பில் உருவாகியிருக்கிற தொடர்தான் ‘ இன்ஸ்பெக்டர் ரிஷி’. இயக்குநர் நந்தினி ஜே.எஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப்சீரிஸ் இம்மாதம் 29-ம் தேதி வெளியாகுகிறது. இதுமட்டுமின்றி இவர் நடித்திருக்கிற ‘ஸ்நேக் & லாடர்ஸ்’ என்ற மற்றொரு தமிழ் வெப்சீரிஸும் இந்தாண்டு வெளியாகிறது. இந்த வெப் சீரிஸில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக கார்த்திக் சுப்புராஜ் பணியாற்றியிருக்கிறார்.

இதன் பிறகு பீரியட் ஆக்‌ஷன் வெப் சீரிஸாக அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியிருக்கிறது ‘கேங்ஸ் – குருதிபுனல்’. நாசர், நிமிஷா சஜயன், ரித்திகா சிங் ஆகியோர் இந்த வெப் சீரிஸில் நடித்திருக்கின்றனர். இந்த சீரிஸில் செளந்தர்யா ரஜினிகாந்த் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

அதேபோல கடந்த முறை வெற்றி பெற்ற ‘சுழல்’ வெப் சீரிஸின் இரண்டாவது சீசன் இந்தாண்டு வெளியாகும் எனவும் அமேசான் பிரைம் அறிவித்திருக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டு ‘சுழல்’ வெப் சீரிஸின் முதலாவது சீசனை இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி இயக்கியிருந்தனர். கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இதனைத் தாண்டி சில தமிழ்த் திரைப்படங்கள் திரையரங்க ரிலீஸுக்குப் பிறகு வெளியாகவிருக்கின்றன. அந்த வரிசையில் முதலாவதாக இருப்பது சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கிற ‘கங்குவா’ திரைப்படத்தை வாங்கியுள்ளது அமேசான் பிரைம். இந்த நிகழ்வில் வைத்துதான் ‘கங்குவா’ திரைப்படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது.

பாலிவுட்டில் இந்த வருடம் பார்வையாளர்களுக்கு விருந்து படைக்கப் பல வெப் சீரிஸ்கள் வரிசையில் இருக்கின்றன. பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸின் மூன்றாவது சீசன் இந்தாண்டு வெளியாகிறது. அதன் பிறகு பங்கஜ் திரிபாதி நடிப்பில் ஏற்கெனவே ‘மிர்சாபூர்’ வெப் சீரிஸின் இரண்டு சீசன்கள் வெளியாகியிருந்தன. பெரிய அளவிலான எதிர்பார்ப்புக்குப் பிறகு இந்த வெப் சீரிஸின் மூன்றாவது சீசன் இந்தாண்டு வெளியாகும் என அறிவித்திருக்கிறது. இதுமட்டுமின்றி , ‘பஞ்சாயத்’, ‘பாதாள் லோக்’ உள்ளிட்ட ஹிட் வெப் சீரிஸ்களின் அடுத்த சீசன்களும் வெளியாகவிருக்கின்றன.

பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியாகியிருந்த ‘சிட்டாடெல்’ என்ற ஹாலிவுட் வெப் சீரிஸின் இந்திய ஸ்பின் ஆஃபாகத் தயாராகி இருக்கிறது ‘சிட்டாடெல் – ஹனி பண்ணி’. வருண் தவான், சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கிற இந்த வெப் சீரிஸை ராஜ் & டி.கே இயக்கியிருக்கிறார்கள்.

இதன் பிறகு வருகிற 21-ம் தேதி சாரா அலி கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏ வதான் மேரே வதான்’ திரைப்படம் வெளியாகிறது. இதுமட்டுமின்றி அபிஷேக் பச்சனின் ‘பி ஹாப்பி’, அனில் கபூரின் ‘சுபேதர்’ ஆகிய திரைப்படங்களும் இந்தாண்டு வெளியாகின்றன.

மேலும், ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’, டைகர் ஷராஃப்பின் ‘பாகி 4’, பவன் கல்யாணின் ‘உஸ்தத் பகத் சிங்’, ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா -2’, இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் எனப் பல படங்கள் திரையரங்குகளில் வெளியான பிறகு அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவிருக்கின்றன.

Related Posts

குடும்பத்துக்கு விஜய் கடன்
இந்தியா

குடும்பத்துக்கு விஜய் கடன்

March 31, 2026
விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?
இந்தியா

விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு.. சங்கீதா பரபரப்பு புகார் – பின்னணியில் அரசியல் சதியா?

February 28, 2026
இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!
உலகம்

இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் அனுமதி!

January 4, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Recent News

மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version