Wednesday, February 4, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home ஆன்மீகம்

இன்றைய ராசிபலன்

by Editor
March 31, 2024
in ஆன்மீகம்
0 0
A A
0
Share on FacebookShare on Twitter

இன்றைய ராசிபலன்

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மார்ச் – 31-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன் ( இன்றைய ராசிபலன் )

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மார்ச் – 31-ம் நாளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.

27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷ ராசி அன்பர்களே!

எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவை யான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டா கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும். அம்பிகையை தியானித்து வழிபட காரியங்கள் சாதகமாக முடியும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் கேட்கும் உதவியை செய்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவும், திடீர் செலவுகளும் ஏற்படும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில சங்கடங் கள் ஏற்படும்.

ரிஷப ராசி அன்பர்களே!

மனதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். மகாவிஷ்ணுவை வழிபட சிரமங்கள் குறையும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் உண்டாகும்.

மிதுன ராசி அன்பர்களே!

இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதர வகையில் வீண்செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணை யால் மகிழ்ச்சி உண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்து இழுபறியாக இருந்த காரியம் அனுகூலமாக முடியும். தாய்வழி உறவினர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். விநாயகரை தியானித்து வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் பெற வாய்ப்பு உண்டு.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உற்சாகம் தரும்.

கடக ராசி அன்பர்களே!

இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக் கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். மனதில் துணிச்சலுடன் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். பழைய கடனைத் திருப்பித் தரும் வாய்ப்பு ஏற்படும். கொடுத்த கடனும் திரும்பக் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையால் ஆதாயம் பெற வாய்ப்பு உள்ளது .
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

தேவையான பணம் கையில் இருக்கும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் மூலம் கிடைக் கும் தகவல் மகிழ்ச்சி தரும். இன்று துர்கையை வழிபட காரியங்களை வெற்றிகரமாக முடித்துவிட முடியும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீட்டில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

தந்தைவழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். இன்று சிவபெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் உண்டாகும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

துலா ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவு களும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளை களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நண்பர்கள் தொடர்பு கொண்டு மகிழ்ச்சி தரும் தகவல் ஒன்றை பகிர்ந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்று.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர் பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உறவினர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். இன்று முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மனச்சங்கடம் ஏற்படக்கூடும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

தனுசு ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்க மாக நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வதுடன் பாராட்டவும் செய்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவி னர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதால் கையிருப்பு கரையும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

மகர ராசி அன்பர்களே!

செயல்களில் திட்டமிடுதல் மிகவும் அவசியம். அதேபோல் செலவுகளிலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு பிள்ளைகள் மூலம் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிவபெருமானை வழிபட ஆரோக்கியம் மேம்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் செய்தி கிடைக்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுக்க உகந்த நாள்.

கும்பராசி அன்பர்களே!

தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நண்பர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வாராஹி தேவி வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்களுக்காக செலவு செய்ய நேரிடும்.

மீனராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சங்கடம் ஏற்பட்டு நீங்கும்.

Related Posts

மகத்துவம் மிகுந்த மார்கழி மாத சிறப்புகள்!
ஆன்மீகம்

மகத்துவம் மிகுந்த மார்கழி மாத சிறப்புகள்!

December 22, 2025
பரணி_தீபம் வீட்டில் எதற்காக ஏற்ற வேண்டும்?
ஆன்மீகம்

பரணி_தீபம் வீட்டில் எதற்காக ஏற்ற வேண்டும்?

December 2, 2025
இன்று பரணி தீபம் 2025.. வீட்டில் பரணி தீபம் ஏற்றும் முறையும், நல்ல நேரமும்..
ஆன்மீகம்

இன்று பரணி தீபம் 2025.. வீட்டில் பரணி தீபம் ஏற்றும் முறையும், நல்ல நேரமும்..

December 2, 2025
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இஸ்ரேலில் மதவழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு – 7 பேர் பலி

அருட்சகோதரர் மீது தாக்குதல் – அதிகாரிகள் அறுவரும் பணிநீக்கம்

January 27, 2026
தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் – போராட்டத்தை நிறுத்துவதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையினால் பதற்றம்

January 27, 2026
புதிய முறையில் வரவுள்ள ஆசிரியரிகளின் இடமாற்றம்..!

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிப்பு

January 27, 2026
சமூக ஊடகங்களில் பரவும் கொழும்பு பிரபல பாடசாலை மாணவ தலைவன் – ஆசிரியைகள் வீடியோ Call சர்ச்சை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளர் பணிப்பு

சமூக ஊடகங்களில் பரவும் கொழும்பு பிரபல பாடசாலை மாணவ தலைவன் – ஆசிரியைகள் வீடியோ Call சர்ச்சை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளர் பணிப்பு

January 27, 2026

Recent News

இஸ்ரேலில் மதவழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு – 7 பேர் பலி

அருட்சகோதரர் மீது தாக்குதல் – அதிகாரிகள் அறுவரும் பணிநீக்கம்

January 27, 2026
தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் – போராட்டத்தை நிறுத்துவதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையினால் பதற்றம்

January 27, 2026
புதிய முறையில் வரவுள்ள ஆசிரியரிகளின் இடமாற்றம்..!

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிப்பு

January 27, 2026
சமூக ஊடகங்களில் பரவும் கொழும்பு பிரபல பாடசாலை மாணவ தலைவன் – ஆசிரியைகள் வீடியோ Call சர்ச்சை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளர் பணிப்பு

சமூக ஊடகங்களில் பரவும் கொழும்பு பிரபல பாடசாலை மாணவ தலைவன் – ஆசிரியைகள் வீடியோ Call சர்ச்சை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்விச் செயலாளர் பணிப்பு

January 27, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version