Friday, February 27, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home Uncategorized

ஜனாதிபதியின் 2026 சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

by editor
February 4, 2026
in Uncategorized
0 0
A A
0
ஜனாதிபதியின் 2026 சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
Share on FacebookShare on Twitter

பல சவால்களுக்கு மத்தியில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து, நாடு முன்னேறி வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகின்றோம். இலங்கையர்களாகிய நாம் அனைவரும் இணைந்து போராடி, ஒன்றரை வருட குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை அடைவதில் வெற்றி பெற்றுள்ளோம். என ஜனாதிபதி 78 ஆவது தேசிய சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரவித்துள்ளார்.

சவால்களுக்கு மத்தியில், கூட்டாகவும் உறுதியுடனும் செயற்பட்டு நமது நாட்டை தூய்மையான அரசியல் கலாசாரத்திற்குள் கட்டியெழுப்பப்பட்ட அழகான இலங்கையாக சர்வதேச அளவில் முத்திரை பதிப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.

நாம் பெற்றுள்ள பேரண்டப் பொருளாதார நன்மைகள் இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள அனைத்து இன சமூகங்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்வதே எமது அடுத்த முக்கிய நோக்கம் ஆகும். அவ்வாறு இன்றி, புதிதாக கட்டியெழுப்பப்படும் அபிவிருத்தி செயல்முறையின் உண்மையான வெற்றியை அடைவது சாத்தியமில்லை என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

அண்மைய காலத்தில் இடம்பெற்ற மிகப் பாரிய இயற்கை அனர்த்தத்தை நாம் சந்திக்க வேண்டியிருந்தது. அந்த அனர்த்தத்தின் அனுபவம் வேதனையாக இருந்தபோதிலும், கடந்த ஒன்றரை வருட குறுகிய காலத்தில் நாம் கட்டியெழுப்பிய உறுதியான அடித்தளங்கள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஆதரவுடன், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் பணியில் வெற்றிகரமாக முன்னோக்கிச் செல்கின்றோம்.

சுதந்திரத்திற்குப் பின்னரான காலங்களில், நமது நாட்டை சரியான திசையில் வழிநடத்தவும், தேசிய ரீதியில் அடையவேண்டிய இலக்குகளை அடையவும், ஒற்றுமையாக வாழவும் வரலாற்றில் கிடைத்த பொன்னான வாய்ப்புகள் பெரும்பாலும் தவறவிடப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்த முறை அந்தத் தவறை மீண்டும் செய்யாமல், நமது நாட்டை முன்பை விட மிகவும் முன்னேறிய, வலிமையான மற்றும் கௌரவத்துக்குரிய நாடாக மேம்படுத்துவதற்கு நாம் உறுதியுடன் செயல்படுவோம். நமது பெருமைமிக்க கலாசாரம், பண்டைய வரலாறு மற்றும் சிறந்த பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அதன் மேல் உறுதியாக நிலைத்து நின்று, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பதை இங்கே உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இருபதாம் நூற்றாண்டில் பிறந்தவர்களின் ,பெருமைமிக்க நாடு பற்றிய கனவு கலைந்தபோதும், இருபத்தியோராம் நூற்றாண்டில் அந்தக் கனவை நனவாக்கி, நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் முன்னேறிய, வளமான மற்றும் சிறந்த நாடாக இலங்கையை கட்டியெழுப்பி, நாம் எதிர்பார்க்கும் புதிய சகாப்தத்தை உருவாக்க முடியும் என நான் திடமாக நம்புகிறேன். இதன்போது, இந்நாட்டின் அனைத்து மக்களின் வலிமை, ஒருமைப்பாடு மற்றும் உறுதிப்பாட்டில் நாம் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளோம்.

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையைக்’ கட்டியெழுப்ப, ஒற்றுமை,உறுதிப்பாடு மற்றும் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுடன், சுதந்திரத்தின் உண்மையான நோக்கங்களை அடைவதற்கு, ஊக்கமளிக்கும், அர்த்தமுள்ள தேசிய சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
Uncategorized

யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

February 27, 2026
வாகனச் சாரதிகளுக்கான விஷேட செய்தி
Uncategorized

பாதையில் வலது பக்கத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற இளைஞனுக்கு பதினைந்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

January 16, 2026
ஒரு லீற்றர் டீசல் ரூ.12 நட்டத்திலே விற்பனை
Uncategorized

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றுகை..!

January 15, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
2026 ஆம் ஆண்டின் முதல் மாவட்ட செயலாளர்கள் மாநாடு நாரஹேன்பிட்டியில் உள்ள “நில மெதுர” வளாகத்தில்….

2026 ஆம் ஆண்டின் முதல் மாவட்ட செயலாளர்கள் மாநாடு நாரஹேன்பிட்டியில் உள்ள “நில மெதுர” வளாகத்தில்….

February 27, 2026
”விஷ போதைப்பொருள் தடுப்பு வாரம்” மார்ச் 01 முதல் ஆரம்பம்..

”விஷ போதைப்பொருள் தடுப்பு வாரம்” மார்ச் 01 முதல் ஆரம்பம்..

February 27, 2026
போதைப்பொருள் வியாபாரி ‘பம்போ’ கைது

போதைப்பொருள் வியாபாரி ‘பம்போ’ கைது

February 27, 2026
யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

February 27, 2026

Recent News

2026 ஆம் ஆண்டின் முதல் மாவட்ட செயலாளர்கள் மாநாடு நாரஹேன்பிட்டியில் உள்ள “நில மெதுர” வளாகத்தில்….

2026 ஆம் ஆண்டின் முதல் மாவட்ட செயலாளர்கள் மாநாடு நாரஹேன்பிட்டியில் உள்ள “நில மெதுர” வளாகத்தில்….

February 27, 2026
”விஷ போதைப்பொருள் தடுப்பு வாரம்” மார்ச் 01 முதல் ஆரம்பம்..

”விஷ போதைப்பொருள் தடுப்பு வாரம்” மார்ச் 01 முதல் ஆரம்பம்..

February 27, 2026
போதைப்பொருள் வியாபாரி ‘பம்போ’ கைது

போதைப்பொருள் வியாபாரி ‘பம்போ’ கைது

February 27, 2026
யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

February 27, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version