ஈரான் தனது ஏவுகணைகளில் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் (Cluster Munitions – கொத்துக் குண்டுகள்) வகை வெடிபொருட்களைப் பொருத்தி தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர் நடாவ் ஷோஷானி (Nadav Shoshani) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் பலமுறை இத்தகைய கொத்துக் குண்டுகளை இஸ்ரேலின் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி ஏவியுள்ளதாகவும், இது ஒரு பாரிய போர்க்குற்றமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு பெரிய ஏவுகணை வானிலேயே வெடித்து, அதிலிருந்து நூற்றுக்கணக்கான சிறிய குண்டுகள் (Bomblets) பரவி விழும் வகையில் இந்த தாக்குதல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவற்றில் சில உடனடியாக வெடிக்காமல் நிலக்கண்ணி வெடிகளைப் போல பின்னர் வெடிக்கும் அபாயம் உள்ளதால், பொதுமக்களுக்கு — குறிப்பாக சிறுவர்களுக்கு — நீண்டகால ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
டெல் அவிவ் உள்ளிட்ட மத்திய இஸ்ரேல் பகுதிகளில் இத்தகைய ஏவுகணைத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய போலீஸார் தெரிவித்துள்ளனர்.



Discussion about this post