Saturday, March 21, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home ஆன்மீகம்

சனி பெயர்ச்சி பலன் 2023..
யாருக்கு விடிவு காலம்..சனியால் யாருக்கு விபரீத ராஜயோகம்

by editor
December 9, 2022
in ஆன்மீகம்
0 0
A A
0
சனி பெயர்ச்சி பலன் 2023..யாருக்கு விடிவு காலம்..சனியால் யாருக்கு விபரீத ராஜயோகம்
Share on FacebookShare on Twitter

சென்னை: சனி பகவானின் ஆட்சி வீடு கும்ப ராசி. மகர ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சனிபகவான் கும்ப ராசிக்கு திருக்கணித பஞ்சாங்கப்படி ஜனவரி 17ஆம் தேதி இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த சனி பெயர்ச்சியால் மிதுனம், கடக ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது, வேலை தொழில் எப்படி இருக்கும், பொருளாதார நிலைமை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சனிபகவான் 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். ஜனவரி 30ஆம் தேதி சனி பகவானுக்கு அருகில் சூரியன் வரும் போது அஸ்தமனம் அடைகிறார். மார்ச் மாதம் 6ஆம் தேதி சனி பகவான் உதயமாகிறார். 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி வக்ர மடையும் சனிபகவான் நவம்பர் 4ஆம் தேதி மீண்டும் நேர்கதியில் பயணம் செய்வார்.

கும்ப ராசி

கும்ப ராசியில் இடப்பெயர்ச்சியாகும் சனிபகவான் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரப்போகிறார். பொதுவாகவே சனி பகவான் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி காலங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த சனி பெயர்ச்சியால், மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்ய சனியாக ஒன்பதாம் வீட்டில் சனி அமர்கிறார். கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனியாக பயணம் செய்கிறார். சனி பெயர்ச்சியால் மிதுனம், கடக ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது வேலை, தொழிலில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என்று பார்க்கலாம்.

மிதுனம்

சனி பகவான் மிதுன ராசிக்காரர்களுக்கு 8 மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியாவார். கடந்த 5 ஆண்டு காலமாக கண்டச்சனியாகவும் அஷ்டமத்து சனியாகவும் நிறைய கஷ்டங்களையும் படிப்பினைகளையும் கொடுத்து வந்தார் சனிபகவான். இனி சனிபகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் அமரப்போகிறார். பாக்ய ஸ்தான அதிபதி பாக்ய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பு. 2023ஆம் ஆண்டு ஆரம்பம் முதலே உங்களுக்கு அற்புதமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது. ஒன்பதாம் வீட்டில் ஆன்மீகத்திற்கான இடம். நிறைய ஆலய தரிசனம் செய்வீர்கள்.

முயற்சிகளில் வெற்றி சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானம், மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானம், ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மீது விழுகிறது. புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். வேலையில் பளு அதிகரிக்கும் என்றாலும் கடின முயற்சியுடன் வேலையை செய்து முடிப்பீர்கள். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

மாணவர்கள் கவனம்
மாணவர்களுக்கு இது அற்புதமான கால கட்டம். ஆசிரியர்களின் உதவியும் ஆசியும் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மூத்த சகோதரரின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். உறவினர்களின் உதவியும் அன்பும் தேடி வரும். ஜூன் மாதத்தில் சனி பகவான் வக்ர மடையும் காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

வாகன பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. அதிக வேகம் ஆபத்தை தரக்கூடும். வேலை செய்யும் இடத்திலும் நிதானம் அவசியம். கண்களில் கவனம் தொழில் வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு மார்ச் முதல் ஜூன் வரை சிறந்த கால கட்டம். செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். ஜூன் முதல் நவம்பர் மாதம் வரைக்கும் சனி பகவான் வக்ர நிலையில் செல்வதால் கவனமாக இருப்பது அவசியம். கண்கள் தொடர்பான பிரச்சினைகள் வரலாம் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. 2023ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி முதல் சனிபகவான் நேர்கதியில் பயணம் செய்யும் நேரத்தில் உங்களின் பொருளாதார நிலைமை அற்புதமாக இருக்கும். உங்கள் ராசிக்கு சனிக்கிழமை தோறும் ஏழைகளுக்கு உணவு தானம் செய்யுங்கள். ஆடை தானம் செய்யுங்கள்.

கடகம்

சந்திரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு சனி பகவான் எட்டாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். அஷ்டமத்து சனி காலம் என்பதால் ஆட்டி வைக்குமே என்று அச்சப்பட வேண்டாம். சனி பகவான் எட்டாம் வீட்டில் பயணம் செய்து விபரீத ராஜ யோகத்தை தருவார். எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரும் சனி பகவான் நிறைய வேலை பளுவை தரப்போகிறார். கவனமாக கையாளுங்கள் யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். அதுவே உங்களுக்கு சிக்கலாகி விடும். ஓய்வில்லாத வேலை இந்த கால கட்டத்தில் வேலை வேலை என்று ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருப்பீர்கள். உயரதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். சனி பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு பத்து, இரண்டு, 5ஆம் வீடுகளின் மீது விழுகிறது. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். திருமண வாழ்க்கையில் இருப்பவர்கள் விட்டுக்கொடுத்துசெல்வது நல்லது.
கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வந்து போகும். வேலையில் கவனம் சனி பெயர்ச்சி ஜனவரி 17ஆம் தேதி நிகழ உள்ளது. செய்யும் வேலைகளில் கவனமும் நிதானமும் அவசியம். எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்ய வேண்டாம். உணவுகளில் கவனம் தேவை. சரியான சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியம். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். எந்த காரியம் செய்வதற்கு முன்பாகவும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்து மாட்டிக்கொள்ள வேண்டாம். கால்கள், எலும்புகளில் பிரச்சினை வரக்கூடும் கவனம் தேவை. உடற்பயிற்சியும் சூரிய நமஸ்காரமும் செய்வது அவசியம்.

பரிகாரம் சனி பகவான் 2023ஆம் ஆண்டு ஜூன் முதல் நவம்பர் வரைக்கும் வக்ர கதியில் செல்லும் போது கவனமாக இருப்பது அவசியம். பொருளாதார ரீதியாக சில சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். யாருக்கும் பணத்தை கடனாக கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட்டு பணத்தை வாங்கித்தர வேண்டாம் அதுவே உங்களுக்கு சிக்கலாகி விடும்.

நவம்பர் 4ஆம் தேதிக்கு மேல் புதிய வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு லாபம் கிடைக்கும். சோம்பேறித்தனத்தை கைவிடுங்கள். எந்த காரியத்தையும் சுறுசுறுப்பாக உற்சாகமாக செய்து பழகுங்கள் நல்லதே நடக்கும். சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

Related Posts

மகா சிவராத்திரி 2026 : சிவ அருளை முழுமையாக பெற 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முறை
ஆன்மீகம்

மகா சிவராத்திரி 2026 : சிவ அருளை முழுமையாக பெற 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய முறை

February 15, 2026
மகத்துவம் மிகுந்த மார்கழி மாத சிறப்புகள்!
ஆன்மீகம்

மகத்துவம் மிகுந்த மார்கழி மாத சிறப்புகள்!

December 22, 2025
பரணி_தீபம் வீட்டில் எதற்காக ஏற்ற வேண்டும்?
ஆன்மீகம்

பரணி_தீபம் வீட்டில் எதற்காக ஏற்ற வேண்டும்?

December 2, 2025
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
ஜனாதிபதி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு

March 13, 2026
இருநூறுக்கும் அதிகமான புதிய பேருந்துகள் சேவையில் இணைப்பு

இருநூறுக்கும் அதிகமான புதிய பேருந்துகள் சேவையில் இணைப்பு

March 13, 2026
திருடப்படும் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கான விழுப்புணர்வு

திருடப்படும் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கான விழுப்புணர்வு

March 13, 2026
சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

March 12, 2026

Recent News

ஜனாதிபதி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு

ஜனாதிபதி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு

March 13, 2026
இருநூறுக்கும் அதிகமான புதிய பேருந்துகள் சேவையில் இணைப்பு

இருநூறுக்கும் அதிகமான புதிய பேருந்துகள் சேவையில் இணைப்பு

March 13, 2026
திருடப்படும் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கான விழுப்புணர்வு

திருடப்படும் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கான விழுப்புணர்வு

March 13, 2026
சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

சவுதி தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை? – மேற்கு ஆசியாவில் பதற்றம்

March 12, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version